For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Enthanaalum Naannallaiyeruka! - Pagam 1 நாள்: 09.10.2022 போதகர்: முனைவர் திரு. இராபர்ட் சைமன் எந்நாளும் நந்நாளாயிருக்க வேண்டும். எல்லா நாளும் நல்ல நாளாயிருக்க வேண்டும். அதுதான் நம்முடைய வாஞ்சை. உபாகமம் 6:24 24. இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார். எதற்கு கட்டளையிட்டார்? எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கு கட்டளையிட்டார். கர்த்தர் நமக்கு கொடுத்த கட்டளைகளின் படி செய்யும் போது எல்லா நாளும் நமக்கு நல்ல நாளாகத்தான் இருக்கும். இங்கு ஒரு காரியம்தான் சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தருக்கு பயப்படுகிற பயம் . கர்த்தருக்கு பயப்படுகிற பயம் என்றால் என்ன? Fear of God is not horror or terror which makes Men Run and flee away and hide themselves from God . on the other hand It is a phenomenon that makes men obey and follow God out of their love and awesome respect and reverence for God that is born out of our knowledge about God and His perfect attributes such as His love , holiness, justice , etcetera toward us . கர்த்தருக்கு பயப்படுகிற பயம் என்பது கர்த்தரிடத்திலிருந்து ஓடி ஒளிய செய்யும் மனிதனின் திகிலோ, பயங்கரமோவன்று. அதற்கு மாறாக கர்த்தரை பற்றும் அறிவிலும் அவர் நம்மிடம் பாராட்டும், அன்பு, பரிசுத்தம், நியாயம் போன்ற அனைத்து பூரண குண நலன்களின் நிமித்தமும், அவருடைய குணாதிசயங்களை அறிந்து அவருக்கு கீழ்ப்படிந்து, அவரையே பின்பற்ற வேண்டுமென்று மனிதனுக்குள் அவர் மேல் காணப்படும் அன்பும் அளவற்ற மரியாதையும் கலந்த ஒரு ஆகச்சிறந்த உணர்வே ஆகும். அவர் எதை பரிசுத்தம் என்கிறார்? அவர் எதை செய்யக்கூடும்? செய்யக்கூடாது? என்கிறார். அவருடைய நியாயம் என்ன? அவர் எவ்வளவு பெரிய தேவன். வானத்தையும், பூமியையும் அண்ட சராசரத்தையும் உண்டாக்கினவர். இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம் வேண்டாம் என்று சொல்லுகிறார். அவர் வேண்டாம் என்றால் எனக்கும் வேண்டாம். அவர் சரி என்றால் நானும் சரி அவர் தவறு என்றால் நானும் தவறு. அவர் யார்? அவரை நான் நேசிக்கிறேன். அந்த நேசத்திலே ஒரு மரியாதை இருக்கிறது. அன்பு இருக்கிறது. காதல் இருக்கிறது. பக்தி இருக்கிறது. அந்த நேசத்திலே பயமும் இருக்கிறது. அவர் வேண்டுமென்று சொன்னால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். மிகவும் எளிமையான காரியம் இது. இதற்குப் பெயர்தான் தேவ பயம். இந்த தேவ பயம் மட்டும், நம் வாழ்க்கையில் இருந்தால், எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும்.