SlideShare una empresa de Scribd logo
1 de 20
இலவசத்தின் 2007 ஆம் ஆண்டு ஆப்புரேசல் -  பாலராஜன் கீதா
ஜனவரி  2007 ஆங்கிலத்தில்  T  என்ற எழுத்தில் வரும் வார்த்தைகள் ஈழத்தமிழில் ற இன எழுத்துகளாக மாறுவது ஏன் என்ற தன் ஐயத்தை ஈழத்தமிழ் நண்பர்களிடம் கேட்டிருக்கிறார் இந்த இடுகையில் ஈழ நண்பர்களுக்கு ஒரு கேள்வி  ஹிந்தியில் வந்த குரு திரைப்படம் பார்க்கவில்லை எனினும் காலம் தாழ்த்தியாவது தானும் ஒரு இடுகை எழுதுகிறேன் என்று அலுவலகத்திற்குப் பயணம் செய்யும் தொடர்வண்டியில்  ( இலவசத்திற்கே )  இலவசமாகக் கிடைத்த ஆங்கில செய்தித்தாளில் வந்த தந்தை மகன் பெயர் குழப்பத்தை நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் . நானும் குரு பதிவு போடறேன் ! ( கொஞ்சம் லேட்டா ) 2006   வருடத்தில் தான் எழுதிய இடுகைகளின் ஆப்புரேசலை வலையுலக வாரியார் ஜிரா அவர்களால் எழுதவைத்து நமக்குப் பொங்கல் போனஸாகப் பொங்கியுள்ளார் கொத்ஸ் .  பொங்கல் போனஸ்  மதுரையைச்சேர்ந்த டாக்டர் .  சித்ரா பாரூச்சா என்ற பெண்மணி பி . பி . சி .  ஒலிபரப்பு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை  ( தற்காலிகமாக )  ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் கொத்ஸ் . மருதகாரய்ங்க காலரைத் தூக்கிவிட்டுக்குங்கடே
பெப்ருவரி  2007 30   பின்னூட்டங்களுக்கு மேல் இருப்பின் அந்த இடுகைகளைத் தமிழ்மணம் திரட்டாது என்பதைச் சோதிக்க ஒரு சோதனை இடுகை இட்டிருக்கிறார் . சோதனைப் பதிவு   நம்ம ஆளு ,  விக்கி சகோதரர் ,  நகைச்சுவை மன்னர் ,  நக்கல் நாயகன் பினாத்தலார்  2006   வருட தமிழ் வலைப்பதிவர்களில் சிறப்பாக எழுதியதாக இண்டிபிளாக்கீஸ் தேர்தல் முடிவுகள் வந்திருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் கொத்ஸ் . இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ   தமிழ்மணத்தில் பின்னூட்ட உயரெல்லை குறித்த அறிவிப்பினால் ,  தன் இடுகைகளின் வார்ப்புருவில் மாற்றம் எதுவும் தேவையில்லை என்ற சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கிறார் இந்த இடுகையில் .   சக்சஸ் !  சக்சஸ் ! அஸ்ஸாம் மாநிலத்தில் விளையும் ஒருவித சிவப்புமிளகாய்தான் உலகத்திலேயே அதிக காரமான மிளகாய் என்ற கின்னஸ்  சாதனையை  மகிழ்ச்சியுடன் நம்முடன் சில மேலதிகத் தகவல்களுடன் பகிர்ந்துகொள்கிறார் கொத்ஸ் .   இண்டிபிளாக்கீஸைத் தொடர்ந்து ஒரு கின்னஸ் சாதனை !   இண்டிபிளாக்கீஸ் நடத்தும்  2006   வருட சிறந்த தமிழ் வலைப்பதிவர்களுக்கான தேர்தலில் போட்டியில் உள்ள மாஸ்கோ மருத்துவர் இராமநாதனுக்காகவும் பினாத்தலாருக்காகவும் ஒருவர் குரு ,  மற்றொருவர் நண்பர் இருவருமே வேண்டப்பட்டவர் என்பதனால் இரண்டு வெவ்வேறு மின்னஞ்சல் முகவரிகளில் இருவருக்குமே தனித்தனியாக வாக்களிக்கும்படி வேண்டிக்கொண்டிருக்கிறார் .   இரு தலை கொள்ளி எறும்பு
மார்ச்  2007 –  முதல் பகுதி மகளிர் தினத்திற்கு அனைத்து உலக மகளிருக்கும் வாழ்த்துகள் கூறியபின்  500   இடுகைகள் எழுதிய துளசி ரீச்சருக்கு ஸ்பெஷல் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார் .  எல்லா சராசரி மனிதர்களிடம்  ( ஆண்கள்  ?)  இருக்கும் குணங்கள் எதுவும் பெண் வலைப்பதிவர்களிடம் இருப்பதில்லை என்ற நுனிப்புல் உஷாவின் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் கொத்ஸ் .  துளசி டீச்சரும் உஷாக்கா பதிவும் !   12   செயல்களில்  [  இது சடுதியிலாம்  :-)  ]  சுவையான சாம்பார் சாதம் செய்வது எப்படி என விளக்கி இடுகையை வெட்டிப்பயல் பாலாஜிக்கு அர்ப்பணிக்கிறார் .  சடுதியில் சாம்பார் சாதம் !!   தன் நண்பர்கள் இல்லத்தில் சிறுவயது பையன்கள் இருவரும் தத்தம் தந்தையே மிகவும் உயர்ந்தவர் என ஹீரோ வொர்ஷிப் செய்வதைப் பார்த்து சிறு பெண்களாக இருந்தால் அவர்கள் தத்தம் தாயை உயர்வாகப் பேசுவார்களா  ?  ஹீரோ வொர்ஷிப் ஏன் தேவைப்படுகிறது  ?  வயதிற்கேற்ப ஹீரோ ஏன் மாறுகிறார்  ?  போன்ற சில கேள்விகள் எழுப்புகிறார் கொத்ஸ் . இளம் சிறார்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு
மார்ச்  2007 –  இரண்டாம் பகுதி எக் மசாலா செய்வது எப்படி என்ற சமையல் குறிப்பு இந்த இடுகையில் . எக் மசாலாவும் எடுபட்ட பயலும் !!   தன் கிறுக்குத்தனங்களை ஸீசனல் ,  ஒரேயடியாகப் பிடிக்கும் பிடிக்காது ,  புதுப்புது தொழில்நுட்ப சாதனங்களின்மீது பற்று ,  ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவது ,  எந்தப்புத்தகத்தையும் இரவுபகல் பார்க்காமல் ஒரேமூச்சில் படித்து முடிக்க முயல்வது ,  மனதில் நினைப்பதை யோசிக்காமல் சொல் ( லி மாட்டிக் கொள் ) வது ,  பிடித்த உணவகத்தில் எல்லா உணவுப்பொருள்களையும் ஒரு பிடி பிடிப்பது ,  சமையலில் சொதப்புவது என வரிசைப்படுத்தியுள்ளார் கொத்ஸ் . என்னமோ என்னமோ பிடிச்சிருக்கு !!  விலங்குகள் உரிமை குறித்து அலசப்படும் இடுகை இது .  விலங்குகள் உரிமை என்றால் என்ன  ? லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஒரு பதிவிற்கு எதிர்வினையாக இந்த இடுகையை இட்டுள்ளார் .  திருநங்கைகளை இழிவாகக் காட்டபட்ட தொலைக்காட்சித் தொடரின் கருத்துகளை எதிர்க்காமல் வித்யா தனிமனித தாக்குதல் செய்திருக்கிறார் .  அது சரியல்ல என்கிறார் கொத்ஸ் .  விளிம்புநிலை மாந்தர்களும் ஊடகச் சார்புநிலைகளும் !
ஏப்ரல்  2007 –  முதல் பகுதி நியூஜெர்சியில்  28-04-2007   அன்று நடக்கவிருக்கும் வலைபதிவர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார் இந்த இடுகையில் .  Floralia 2007 -  பூக்களுக்கான உற்சவம்  !  தமிழ்மணத்தில் ஏதேனும் மாற்றங்கள் முன்னேற்றங்கள் தேவை எனில் அவற்றை வலைபதிவர்கள்  /  வாசகர்கள் பின்னூட்டமாகத் தெரிவித்தால் வரவிருக்கும் நியூஜெர்ஸி வலைப்பதிவர் சந்திப்பில் அவற்றை விவாதித்து ,  தொகுத்து ,  தமிழ்மண நிர்வாகிகளுக்குத் தெரியப்படுத்தத் தேவையான முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்படும் என்று எழுதியுள்ளார் இந்த இடுகையில் .  தமிழ்மணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன ?   கல்விக்கூடங்களில் இடஒதுக்கீடு குறித்து ஏதேனும் எழுதியிருப்பார் என்று ஆவலுடன் படிக்க வரத் தூண்டும்படி தலைப்பை வைத்துவிட்டு இடுகையில் பாலில் உள்ள கொழுப்புச் சத்து நிரம்பிய க்ரீமி லேயரை ஏன் நீக்கிவிட்டு அருந்தவேண்டும் என்று விவ ( கா ) ரமாக எழுதியுள்ளார் கொத்ஸ் .  க்ரீமி லேயரை ஏன் தூக்கணும் ?   தனக்குப்பிடித்த அழகுகள் ஆறு என முகம் ,  இடம் ,  நிகழ்வு ,  குறும்பு ,  பரிசு ,  சுற்றுப்புறத் தூய்மை என வரிசைப்படுத்துகிறார் கொத்ஸ் . அ . ஆ . ( அன்பே ஆருயிரே எல்லாம் இல்லைங்க )
ஏப்ரல்  2007 –  இரண்டாம் பகுதி நடத்தவிருக்கும் கோச்சிங் செண்டர் விளம்பர நோட்டீஸில் விவகாரமான மொழிபெயர்ப்பினால் கைப்புள்ள அடி வாங்கி பாண்டேஜ் பாண்டியனாக வந்து தன் சங்க உறுப்பினர்களிடம் தான் அடிவாங்கியதை விவரிப்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார் கொத்ஸ் .   கோச்சிங் செண்டர் நோட்டீஸ் !  வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் முதல் ஆண்டு நிறைவு விழாவின்போது அந்தக் குழுவின் இடுகைகளைப்பற்றி பினாத்தலாரின் ஆப்புரேசலை மறுஆப்புரேசல் செய்கிறார் கொத்ஸ் ஆப்பு விமர்சனம்  -  பெனாத்தலாரின் ஆப்பு !   நியூஜெர்சியில் நடக்க இருக்கும் வலைப்பதிவர் சந்திப்பிற்கான விளம்பர இடுகை இது .   இடம் ,  பொருள் ,  ஏவல்  - Floralia 2007!!   வ . வா . சங்கத்தின் முதல் ஆண்டு நிறைவு விழாவின்போது சங்க உறுப்பினர்களை ஆப்புரேசல் செய்யக் கேட்டுக்கொண்டதற்கிணங்க சங்க உறுப்பினர்களைப் பற்றி  வெண்பாவாகவே வடித்துவிட்டார் கொத்ஸ் .   நான் ஏன் வைக்கணும் ஆப்பு  ?!!
மே  2007 –  முதல் பகுதி ஒரு கருநாடக இசைப்பாடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியின் கனவில் கலைஞர் அவர்கள் வந்து பாட்டுபாடுவதாகவும் பின்நவீனத்துப்பானியில் அதற்கு விளக்கவுரையையும் அளித்துள்ளார் .   ஏதய்யா கதி  -  கர்நாடக சங்கீத பாடலும் பின்நவீனத்துவ ஆய்வும்  வாரம் ஒரு நட்சத்திரம் தொடரில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதற்காக சில பழைய சுட்டிகளை  (  முதல் பதிவு ,  ஏன் இலவசக்கொத்தனார்  - 1  ,  ஏன் இலவசக்கொத்தனார்  - 2  ,  எனக்குப் பிடித்தவை  ( நான்கு விளையாட்டு )  ,  மதுமிதாவிற்காக இலவச அறிமுகம் ,  அப்புறம் கடைசியா அழகுகள் ஆறு  )  கொடுத்துள்ளார் .  தமிழ்மணத்துக்கு ஏழு நாள் ஏழரை !!  ரஜினியின் சிவாஜி திரைப்படத்திற்கு நமக்கு நாமே என்ற விதத்தில் வாசகர்களையே  4 x 4 x 4 x 4 x 4  (= 1024)  விதங்களில் தேர்ந்தெடுத்து அதற்கேற்றவிதத்தில் திரைவிமர்சனம் வரும்படி ஒரு புதியவிதத்தில் உள்ள பினாத்தலாரின் இடுகைக்கு ட்ரெய்லர் ஓட்டியிருக்கிறார் .  MXXIV -  பெனாத்தலாரின் வா சிஜி கோட் நியூஜெர்ஸியில் நிகழ்ந்த பதிவர் சந்திப்பு குறித்துத் தன்னால் எழுத இயலவில்லை என்று மாப்பு கேட்டுக்கொண்டு மற்ற வலைப்பதிவர்கள் எழுதியதை சுட்டி ( டு )  காட்டியுள்ளார் .  நியூஜெர்ஸி பதிவர் சந்திப்பு  -  ஊடக விமர்சனங்கள்
மே  2007 –  இரண்டாம் பகுதி டாக்டர் ஜெகில் அண்ட் ஹைட்  :-)  போன்ற இடுகை இது .  ஹைலைட் செய்தால் அல்லது  control A  பொத்தான்களின் உதவியுடன் மறைந்திருக்கும் வாசகங்களை வாசிக்க இயலும் .  இது சிலருக்குத்தான் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் .  தன் அடுத்த இடுகையில் இதை விளக்கமாகவும் எழுதியுள்ளார் கொத்ஸ் .  இந்த இடுகைக்கு உப்பு மாமா பினாத்தலாரும் உதவியிருக்கிறார் .  நட்சத்திர உப்புமா  (  அ )  பெனாத்தலாருக்கு சமர்ப்பணம்  தமிழ்த் திரைப்படங்களின் பெயர்களை விடையாகக்கொண்ட புதிர்கேள்விகள் இந்த இடுகையில் .  உதவியாக விடைகள் இருக்கும் பதிவையும் தந்திருக்கிறார் .   விடுகதையா இந்த வாழ்க்கை  ?!!   தன்னுடைய முந்தைய இடுகையைச் சி ( ப ) லரால் புரிந்துகொள்ள இயலவில்லையே என்ற கமல் ரேஞ்ச் ஆதங்கத்துடன் எழுதியிருக்கிறார் .  தன் வலையுலக வரலாற்றில் முதன்முறையாகப் பின்னூட்டப்பெட்டியை மூடிவைத்து தேவையான பின்னூட்டத்தை முந்தைய பதிவில் இடும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார் .  கமலின் வலி எனக்குப் புரிகிறது !  பயணக்கட்டுரை நாயகி துளசி ரீச்சருக்கு இந்த இடுகையை சமர்ப்பித்திருக்கிறார் .  இதில் அமெரிக்க கிழக்குக் கடற்கரை ஓரம் நியூயார்க் மாநிலத்திலுள்ள லேக் ஜியார்ஜ் என்ற ஊருக்குச் சென்றுவந்த  ( சென்று உவந்த )  விவரங்களைப் படம் காட்டியிருக்கிறார் .  பேராசெய்லிங் மற்றும் ரிவர் ட்யூபிங் பயணங்கள் மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக எழுதியுள்ளார் .  துளசி டீச்சருக்கு சமர்ப்பணம் !
ஜூன்  2007 –  முதல் பகுதி சில நாடுகளில் ஜூன்  1   அன்று குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது என்ற செய்தியுடன் ,  வாசகர்களை வெண்பா வடிக்கலாம் வா என்கிறார் கொத்ஸ் .  சிறுவர் சிரிப்பே சிறப்பு ! - ( வெ . வ . வா ) தமிழ்மணத்தில் நட்சத்திர வாரம் ஒன்றில் பங்கெடுத்து இடுகைகள் இட்டு முடித்தபின் அனைவருக்கும் தன் வணக்கங்களைத் தெரிவிக்கிறார் இந்த இடுகையில் .  தினம் ஒரு இடுகை தனக்குச் சற்றெ கடினமாக இருந்தது என்று கூறுகிறார் .  மீள்பதிவு ,  பயணக்கட்டுரை ,  சமையல் குறிப்பு ,  புதிர்போட்டி ,  வெண்பா போட்டி எல்லாவற்றிற்கும் இறுதியாக பாடகர் டி . எம் . கிருஷ்ணா பாடிய நான்கு மங்களம் பாடல்கள் கொண்ட ஒரு இசைப் பதிவைக் கொடுத்திருக்கிறார் .  அந்தரிகி வந்தனமு !!   திரைப்படப் பெயர்களின் புதிர்களின் விடைகளை விவரிக்கிறார் இந்தப் பதிவில் .  என் இல்லத்தினருக்குப் பிடித்த சுடோகு புத்தகங்களைப் பரிசாகக் பெ ( ற் ) ற எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .  என்னை மிகவும் யோசிக்கவைத்த கேள்வியின் விடை  உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்பதுதான் .  விடை தருவேன் நானே !!  சில அமெரிக்க மாநிலங்களில் விவாகரத்து வழக்குகளில் அதைகோருவதற்கான காரணங்களை நகைச்சுவையாக எழுதியுள்ளார் .  இரண்டாவது பகுதியாக ஜீவனாம்சம் குறித்துச் சில கேள்விகளை விவாதிக்க வாசகர்களுக்கு அழைப்புவிடுகிறார் .  இறுதியில் ஜீவனாம்சம் குறித்த வினோத வழக்கு ஒன்றையும் எழுதியுள்ளார் .  சில விவாகரத்துக் குறிப்புகளும் ஜீவனாம்ச கேள்விகளும் ...
ஜூன்  2007 –  இரண்டாம் பகுதி FreeStuffHotDeals Hacker Puzzle  என்ற புதிரைச் சுட்டுத் தருகிறார் கொத்ஸ் இங்கே .  கூகிளாண்டவர் உதவியுடன் பலர் இந்தப் புதிரை விடுவித்ததாகப் பின்னூட்டத்தில் எழுதியுள்ளனர் .  சுட்ட புதிர் வேணுமா  ?  சுடாத புதிர் வேணுமா ? தன்னைப்பற்றிய  8   தகவல்களை வலைப்பதிவர் எழுதவேண்டும் என்ற தொடர் விளையாட்டில் தான்  CA, ICWA  தேர்வுகளில் தேசிய அளவில் ரேங்க் பெற்றது ,  தரையிலும் நீரிலும்  ( மேலேயும் கீழேயும் )  வானத்திலேயும் பயணம் சென்றிருந்தாலும் கன்கார்டில் செல்ல இயலாது வருந்தியது ,  அவுஸ்திரேலியா தவிர மற்ற கண்டங்களுக்குச் சென்றுவந்தது ,  சிறுவயதில் மட்டையடிப் பந்தாட்டம் ஆடியது ,  இசையை இரசிக்க ஆரம்பித்துள்ளது ,  வகைதொகை இல்லாமல் பிடித்தது பிடிக்காதது என்று எல்லாவற்றையும் ஆழ்ந்து படிப்பது ,  பொங்கி வரும் தண்ணீரில்  (  ஆறு குளம் அருவி போன்றவைதாங்க  -  வேறெதுவும் எண்ண வேண்டாம் )  குதித்துக் கும்மாளமிடுவது ,  தன் எழுத்தாக்கங்களையும் படிக்க மக்கள் வருகிறார்களே என்று வலைப்பதிவது என்று சுவாரசியமாகச் சொல்கிறார் இந்த இடுகையில் .  எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ ஆசிஃப் அண்ணாச்சி ,  சிபி அண்ணாச்சி காட்டிய வழியில் இலங்கைக்குத்  தாண்டிய அனுமனின் திறந்த மனசைப் படம் பிடித்து  காட்டுகிறார்  கொத்ஸ் .   இதுதாண்டா திறந்த மனசு !!  ஆறே வரிகளில் உள்குத்துடன் சிவாஜி திரைப்பட விமர்சனமாக அல்வா கிண்டிய இடுகை இது .  சிவாஜி  - ( நம் )  வாயிலே ஜிலேபி !!! தன்னைக்கவர்ந்த விளம்பரங்களைப் படம் காட்டுகிறார் இங்கே .  விளம்பரப்படுத்தப்பட்ட பொருள்கள் காப்பி ,  டியோடரண்ட் ,  ட்யூராசெல் ,  பர்கர் ,  மின்சாரபல்புகள் ,  சிகரெட் சுவாசித்தலின் தீமை ,  உடற்பயிற்சி கருவி ,  விசாலமான மகிழ்வுந்து மற்றும் உடைகள்   இது ஒரு விளம்பரப் பதிவு !!!
ஆகஸ்ட்  /  செப்டம்பர்  2007 தங்கமணியின்   நச்சரிப்பு   தாங்காமல்   மருத்துவசோதனை   செய்துகொள்ளப்   போய்   உடலில்   அதிகமாக   இருக்கும்   கொழுப்பு   குறைய   உணவுப்   பழக்கவழக்கங்களை   மாற்றும்படியும்   உடற்பயிற்சி   செய்யும்படியும்   டாக்டன்   ( இனிமேல்   மரியாதை   கிடையதாம் )  கூற   வீட்டிற்கு   வந்தது   டிரெட்மில் ,  ஸ்டெப்பர் .  சைக்கிள் ,  எலிப்டிகல் ,  ஈடிசி .  ஈடிசி .  தொலைக்காட்சி   தொடர்களைப்   பார்த்துக்கொண்டே   உடற்பயிற்சி   செய்ய   மேலிடத்து   உத்தரவு .  மீற   முடியுமா   என்ன   ?  பென்ஸ்   காரில்   சென்ற   அந்த   உடற்பயிற்சி   சாதனக்   கடை   உரிமையாளரிடம்   பேசினால்   அவரும்   சர்வைவல்   ஆஃப்   தி   ஃபிட்னெஸ்   என்று   கடுப்பேத்துகிறார்   என்கிறார்   கொத்ஸ்   சர்வைவல்   ஆப்   பிட்நெஸ் !  ( நிஜமான )  சமீபத்தில் நிகழ்ந்த இந்திய பாகிஸ்தான் மட்டையடிப் பந்தாட்டத்தொடர் விளையாட்டு ஒன்றின் இறுதியில் பாகிஸ்தான் அணித்தலைவர் கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் ,  தான் பாகிஸ்தான் மக்களுக்கும் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியது தனக்கு நெருடலாகத் தோன்றியது .  விளையாட்டில்  *** மதத்தைக் ***  கொண்டு வரும் இது போன்ற பொறுப்பற்ற பேச்சுகள் தேவையா எனக் கேட்கிறார் கொத்ஸ் .  இந்த   சமயத்திலும்   சமயமா ?  தம்பி   மட்டுமதான்   ஜொள்ளு   இடுகை   போடுவாரா   ?  தானும்   சளைத்தவரில்லை   என்று   படம்   காட்டுகிறார்   இதில் Mid Week  ஜொள்ளு
அக்டோபர்  2007 –  முதல் பகுதி மட்டையடிப் பந்தாட்டத்தில்  ( கிரிக்கெட் என்று சொல்வாங்களே அதாங்க )  அவுஸ்திரேலிய அணி ஆட்டக்காரர் சைமண்ட்ஸ் குறித்து சில இந்திய இரசிகர்கள் செய்யும் சேட்டைகளை இனவெறிச் செயல்  ( ரேசிஸம் )  என்று அந்த அணியினரும்  உலக  மட்டையடிப்  பந்தாட்ட  குழுவும்  (  ஐ . சி . சி .)  சொல்வதில்  தனக்கு உடன்பாடில்லை .  சில இந்திய இரசிகர்கள் செய்யும் அச்செயல் தவறுதான் என்றும் ஆனால் அது வெறும்  விளையாட்டினை யொட்டிய கலகச்செயல்  ( ஹூலிகனிஸம் )  என்கிறார் கொத்ஸ் . இதுக்குப் பேரு இனவெறியா ?   தலைப்பிற்கும் இடுகைக்கும் தொடர்பே இல்லை என்று தானே டிஸ்கி விட்ட இடுகை .  உயிரினங்களில் பெண்ணினத்தைவிட ஆணினம் விரைவில் மூப்படைந்து இறக்க ஒரு காரணம் இனவிருத்திக்கான போட்டி என இங்கிலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்களாம் . நீ எல்லாம் ஒரு பொம்பளையா ? அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் பரவிவரும் இந்திய சமுதாயத்தின் பங்கினை விளக்க ராஜ் படேல் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கிய ஆர்ச்சீஸ் காமிக்ஸ் நிறுவனத்திற்குத் தன் பாராட்டினைத் தெரிவிக்கிறார் கொத்ஸ் .   உங்களுக்கு ராஜ் படேலைத் தெரியுமா ?
அக்டோபர்  2007 –  இரண்டாம் பகுதி வலையுலகக் கைப்புள்ளயின் பாணியில் வரப்போகும் கேள்விபதில் இடுகைகளுக்கான முன்னுரை இந்த இடுகையில் குயி ... குயி ... குயி ... குயிஜு வரலாறு ,  அறிவியல் மற்றும் புவியியல் குறித்த வினாக்கள் இந்த இடுகையில் . நடந்ததுக்கு ஆதாரம் எங்கே  ? -  க்விஸ் பாகம்  2 விளையாட்டு ,  கணினியியல் ,  வணிகம் குறித்த கேள்விகள் இந்த இடுகையில் ஆடுது பார் ,  கல்லாப் பெட்டி !  க்விஸ் பாகம்  - 3 தமிழ் ,  ஆங்கிலம் ,  கணக்குத் துறைகளில் கேள்விகள் இந்த இடுகையில் மொழியறிவும் முழியறிவும்  -  க்விஸ் பாகம்  1
நவம்பர்  2007 –  முதல் பகுதி எதிர்பாராத அளவு  40 - 50   வாசகர்கள் கலந்துகொண்டது ,  ஏறக்குறைய  1200   பின்னூட்டங்கள் ,  விடைகள் மற்றும் இறுதி மதிப்பெண் விவரங்கள் , 10   வாசகர்கள் முழு மதிப்பெண்கள்  54   பெற்றது ,  தான் சற்றே சறுக்கியது ,  புதிர்கள் என்ற புதிய பதிவு இட முடிவுசெய்துள்ளது , yours faithfully க்கும்  ஹரிஅண்ணா  அவர்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகள் என்று நினைவுகூர்கிறார் கொத்ஸ்  குயி ... குயி ... குயி ... குயிஜு !  விடை தரும் தருணம் !  முதல் முறையாக வாசிக்கும்போது கொத்ஸ் ஏன் இதுபோன்ற இசைத்துறைபதிவுகளை இதுவரை எழுதவில்லை என்ற ஏக்கம் எழுந்தது .  இடுகையின் இறுதியில்தான் தெரிந்ந்தது அதை எழுதியவர் கருநாடக இசைப்பாடகர் திரு . டி . எம் . கிருஷ்ணா அவர்கள் என்பது .  பாடகர் மற்றும் பக்கவாத்தியக்காரர்கள் எதிர்பாலினராக இருப்பின் வரும் பிரச்சினைகள் குறித்த பதிவு அது .  ஆண்கள் பாடகர்களாக இருந்தால் பெண் பக்கவாத்தியக்காரர்களுக்குத் தகுந்த வாய்ப்பு அளிப்பதில்லை மற்றும் ஆண்கள் பக்கவாத்தியக்காரர்களாக இருந்தால் ,  நல்ல பெயர் பெற்றபின் பெண்பாடகர்களுக்கு பக்கவாத்தியக்காரர்களாக இருப்பதில்லை என்பது .  ஈயம் பித்தளை இசைத்துறையிலும் இருக்கிறது என்பதையே காட்டுகிறது .  ஸ்ருதி சேரா சங்கீதம் தான் பதிவெழுதக் காரணமாக இருந்த டுபுக்கு ,  தமிழ்ப் பகுதியின் கேள்வி பதில்களுக்கு உதவிய ஜீவ்ஸ் ,  பதில் சொல்ல எல்லோருக்கும் உதவிய கூகிளாண்டவர் ,  பினாத்தலார் ,  கொத்ஸின் இனிய மறுபாதி ,  மற்றும் போட்டியில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் இடுகை இது .  என் வால் ஏன் ஆடுது ? -  க்விஸ் பாகம்  4
நவம்பர்  2007 –  இரண்டாம் பகுதி நவம்பர் மாதப் புகைப்படப்போட்டிக்காக சாலை என்ற தலைப்பில் தான் எடுத்த சில புகைப்படங்களை இட்டிருக்கிறார் .  ஆனால் சாலையைவிட வீடுகளும் ,  மரங்களும்தாம் நன்றாக இருக்கின்றன என்றே நான் நினைக்கிறேன் . சா ( லை ) ல சிறந்தது ! மலேசியாவில் ஹிந்திராஃப் என்ற அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் கூட்டத்தினரைக் கலைத்ததையும்  250   பேரைக் கைது செய்ததையும் குறித்துத் தமிழக முதல்வர் இந்தியப் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார் .  அது குறித்து மலேசிய அமைச்சர்  Tamil Nadu Chief Minister M Karunanidhi should lay off  என்று கூறியிருக்கிறார் .  இதை எதிர்த்து ஏன் எந்த மலேசிய  /  தமிழக தமிழ் வலைப்பதிவர்கள் ஒன்றுமே எழுதவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் கொத்ஸ் .  மலேசிய அமைச்சரின் பேச்சு கண்டிக்கப்படவேண்டும் .  இந்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார் கொத்ஸ் . கலைஞரே ,  உம்ம வேலையைப் பார்த்துக்கிட்டு போம் !
டிசெம்பர்  2007 –  முதல் பகுதி நூறாவது இடுகையைப் புதுவிதமாகக் கொண்டாட  " கொத்தனாரின் பதிவுகளில் விஞ்சி இருப்பது உப்புமாச் சுவையா அல்லது பின்னூட்ட வெறியா ?"  என்ற பட்டி மன்றம் ஒன்றினை பாப்பையா  தலைமையில்  ஏற்பாடு செய்திருக்கிறார் .   ஒன்றானவன்  -  இரண்டானவன்  -  இப்ப நூறானவன் !  பட்டிமன்றம் பாகம்  1!   கொத்தனாரின் பதிவுகளில் விஞ்சி இருப்பது பின்னூட்ட வெ ( ற் ) றியே என்று வலையுலக மாதாமகி  :-)  துளசி ரீச்சர் சொல்கிறார் .  உப்புமா ஊசிப்போய்விடும் .  பின்னூட்டங்கள் என்றும் வளர்ந்துகொண்டே இருக்கும் .  உப்புமா பூனை .  பின்னூட்டங்கள் யானை என்கிறார் யானை நாயகி .   சபாஷ் சரியான போட்டி என்று சொல்லும்வண்ணம் ஒரு உப்புமா பதிவு போட்டால்தான் பின்னூட்டங்களுக்கே வாழ்வு .  பின்னூட்டமில்லாத பதிவு இருக்கலாம் .  ஆனால் பதிவில்லாமல் பின்னூட்டங்கள் இருக்க முடியுமா ?  பின்னூட்ட உயர் எல்லை வந்தபோதும் சற்றும் கலங்காமல் உப்புமா கிண்டியவர் கொத்ஸ் .  இடுகையின் தலைப்பே எல்லோரையும் பதிவை  வாசிக்கத்தூண்டும் கலையில் வல்லவர் கொத்ஸ் .  தன்னுடைய நூறாவது இடுகையைக்கூட மற்றவர்கள் போல் வாசகர்களுக்கு நன்றி என்று எழுதாமல் புதுவிதமாகப் பட்டிமன்றம் எனக் கிண்டியிருக்கிறார் கொத்ஸ் என்கிறார் உப்பு மாமா பினாத்தலார் .  கோதாவில் பின்னூட்டநாயகியும் உப்பு மாமாவும்  -  பட்டிமன்றம் பாகம்  2 பின்னூட்டக் கச்சேரிக்கு ஒத்து ஊத வந்தார் தேவ் .  பொதுவாகப் பதிவர்கள் தங்கள் இடுகைகளின் எண்ணிக்கையை மட்டுமே எண்ணிப் பார்ப்பர் .  ஆனால் நம் கொத்ஸ்  நேரம்  காலம் பார்க்காமல் பின்னூட்டங்களுக்கே  தன்  கவனத்தைச்  செலுத்துவார் என்பது அனைவருக்கும் தெரியும் என்கிறார் தேவ் .  தேவு பிழிந்த சேவு  -  பட்டிமன்றம் பாகம்  3
டிசெம்பர்  2007 –  இரண்டாம் பகுதி ,[object Object],[object Object],[object Object],மருத்துவர் தரும் செகண்ட் ஒப்பீனியன்  -  பட்டிமன்றம் பாகம்  4 இடுகைகள் எல்லாமே உப்புமா இல்லை .  வெறும் பின்னூட்டங்களுக்காக மட்டுமே கொத்தனார் இடுகைகளை எழுதவில்லை என்று பட்டிமன்றத்தில் பேசியவர்களோ பின்னூட்டம் இட்டவர்களோ சரியாகச் சொல்லவில்லை .  பட்டிமன்றம் என்றால் அன்றைய நாளில் பேசியவற்றில் எது சிறந்தது என்றுதான் தீர்மானிக்கவேண்டும் .  நானே தீர்ப்பளித்துவிட்டால் எதிரணியினர் வந்து போட்டுத் தாக்கிவிடக்கூடும் என்று அஞ்சிவிட்டார் பாப்பையா .  கொத்ஸின் இடுகைகளில் விஞ்சி இருப்பது உப்புமாவா பின்னூட்ட வெ ( ற் ) றியா என்று ,  தான் தீர்ப்பு அளிப்பதற்குப் பதிலாக சர்வேசன் பாணியில் வாக்கெடுப்பு வைத்துவிட்டார் பாப்பையா .  உப்புமாவே ருசியாக உள்ளது என்று பெரும்பான்மை வாசகர்களும் தீர்ப்பளித்துள்ளனர் .   மக்கள் தீர்ப்பே பாப்பையா தீர்ப்பு !  பட்டிமன்றம் பகுதி  5
டிசெம்பர்  2007 –  மூன்றாம் பகுதி டிசம்பர் மாத புகைப்படப்போட்டியில் கலந்துகொள்வதற்காக மலர்கள் என்ற தலைப்பில் தான் எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார் .   பூ பூக்கும் மாசம் தை மாசம்  -  ஆனா எங்க ஊரில் இல்லை !   சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றினை அறியாதவர்களால் இந்தக் கதையை இரசிக்க இயலாது என்றே நினைக்கிறேன் . வீணாவின் ஜாக்கெட் ! ( ந . ஒ . க .) இந்த இடுகையில் அசைபடம் மற்றும் ஜாடியில் இடக்கூடிய பொருள்கள் என்ற எடுத்துக்காட்டுகளுடன் மேலாண்மை குறித்த சில தகவல்களை எழுதியுள்ளார் .  நாம் எந்த வேலை செய்தாலும் நம் அருகில் என்ன நடக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும் என்று சொல்கிறார் .   பூனைக்குட்டி என்ன பூனைக்குட்டி .  கொரில்லாவே வெளியே வந்துவிட்டதே ! வேலை கிடைக்காததனால் நிறைவேறாத காதலினால் மனநிலை பிறழ்ந்த ஒருவனின் கதை இது . ( ஆங்கில வார்த்தைகள் இல்லாமல் எழுத முயற்சி செய்திருக்கிறேன் என்கிறார் கொத்ஸ் ) அவள் பறந்து போனாளே ...!
நன்றி !!

Más contenido relacionado

Destacado

Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)contently
 
How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024Albert Qian
 
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsSocial Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsKurio // The Social Media Age(ncy)
 
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Search Engine Journal
 
5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summarySpeakerHub
 
ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd Clark Boyd
 
Getting into the tech field. what next
Getting into the tech field. what next Getting into the tech field. what next
Getting into the tech field. what next Tessa Mero
 
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentGoogle's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentLily Ray
 
Time Management & Productivity - Best Practices
Time Management & Productivity -  Best PracticesTime Management & Productivity -  Best Practices
Time Management & Productivity - Best PracticesVit Horky
 
The six step guide to practical project management
The six step guide to practical project managementThe six step guide to practical project management
The six step guide to practical project managementMindGenius
 
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...RachelPearson36
 
Unlocking the Power of ChatGPT and AI in Testing - A Real-World Look, present...
Unlocking the Power of ChatGPT and AI in Testing - A Real-World Look, present...Unlocking the Power of ChatGPT and AI in Testing - A Real-World Look, present...
Unlocking the Power of ChatGPT and AI in Testing - A Real-World Look, present...Applitools
 
12 Ways to Increase Your Influence at Work
12 Ways to Increase Your Influence at Work12 Ways to Increase Your Influence at Work
12 Ways to Increase Your Influence at WorkGetSmarter
 
Ride the Storm: Navigating Through Unstable Periods / Katerina Rudko (Belka G...
Ride the Storm: Navigating Through Unstable Periods / Katerina Rudko (Belka G...Ride the Storm: Navigating Through Unstable Periods / Katerina Rudko (Belka G...
Ride the Storm: Navigating Through Unstable Periods / Katerina Rudko (Belka G...DevGAMM Conference
 
Barbie - Brand Strategy Presentation
Barbie - Brand Strategy PresentationBarbie - Brand Strategy Presentation
Barbie - Brand Strategy PresentationErica Santiago
 
Good Stuff Happens in 1:1 Meetings: Why you need them and how to do them well
Good Stuff Happens in 1:1 Meetings: Why you need them and how to do them wellGood Stuff Happens in 1:1 Meetings: Why you need them and how to do them well
Good Stuff Happens in 1:1 Meetings: Why you need them and how to do them wellSaba Software
 

Destacado (20)

Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)
 
How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024
 
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsSocial Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
 
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
 
5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary
 
ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd
 
Getting into the tech field. what next
Getting into the tech field. what next Getting into the tech field. what next
Getting into the tech field. what next
 
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentGoogle's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
 
How to have difficult conversations
How to have difficult conversations How to have difficult conversations
How to have difficult conversations
 
Introduction to Data Science
Introduction to Data ScienceIntroduction to Data Science
Introduction to Data Science
 
Time Management & Productivity - Best Practices
Time Management & Productivity -  Best PracticesTime Management & Productivity -  Best Practices
Time Management & Productivity - Best Practices
 
The six step guide to practical project management
The six step guide to practical project managementThe six step guide to practical project management
The six step guide to practical project management
 
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
 
Unlocking the Power of ChatGPT and AI in Testing - A Real-World Look, present...
Unlocking the Power of ChatGPT and AI in Testing - A Real-World Look, present...Unlocking the Power of ChatGPT and AI in Testing - A Real-World Look, present...
Unlocking the Power of ChatGPT and AI in Testing - A Real-World Look, present...
 
12 Ways to Increase Your Influence at Work
12 Ways to Increase Your Influence at Work12 Ways to Increase Your Influence at Work
12 Ways to Increase Your Influence at Work
 
ChatGPT webinar slides
ChatGPT webinar slidesChatGPT webinar slides
ChatGPT webinar slides
 
More than Just Lines on a Map: Best Practices for U.S Bike Routes
More than Just Lines on a Map: Best Practices for U.S Bike RoutesMore than Just Lines on a Map: Best Practices for U.S Bike Routes
More than Just Lines on a Map: Best Practices for U.S Bike Routes
 
Ride the Storm: Navigating Through Unstable Periods / Katerina Rudko (Belka G...
Ride the Storm: Navigating Through Unstable Periods / Katerina Rudko (Belka G...Ride the Storm: Navigating Through Unstable Periods / Katerina Rudko (Belka G...
Ride the Storm: Navigating Through Unstable Periods / Katerina Rudko (Belka G...
 
Barbie - Brand Strategy Presentation
Barbie - Brand Strategy PresentationBarbie - Brand Strategy Presentation
Barbie - Brand Strategy Presentation
 
Good Stuff Happens in 1:1 Meetings: Why you need them and how to do them well
Good Stuff Happens in 1:1 Meetings: Why you need them and how to do them wellGood Stuff Happens in 1:1 Meetings: Why you need them and how to do them well
Good Stuff Happens in 1:1 Meetings: Why you need them and how to do them well
 

Bala 2007 Appraisal

  • 1. இலவசத்தின் 2007 ஆம் ஆண்டு ஆப்புரேசல் - பாலராஜன் கீதா
  • 2. ஜனவரி 2007 ஆங்கிலத்தில் T என்ற எழுத்தில் வரும் வார்த்தைகள் ஈழத்தமிழில் ற இன எழுத்துகளாக மாறுவது ஏன் என்ற தன் ஐயத்தை ஈழத்தமிழ் நண்பர்களிடம் கேட்டிருக்கிறார் இந்த இடுகையில் ஈழ நண்பர்களுக்கு ஒரு கேள்வி ஹிந்தியில் வந்த குரு திரைப்படம் பார்க்கவில்லை எனினும் காலம் தாழ்த்தியாவது தானும் ஒரு இடுகை எழுதுகிறேன் என்று அலுவலகத்திற்குப் பயணம் செய்யும் தொடர்வண்டியில் ( இலவசத்திற்கே ) இலவசமாகக் கிடைத்த ஆங்கில செய்தித்தாளில் வந்த தந்தை மகன் பெயர் குழப்பத்தை நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் . நானும் குரு பதிவு போடறேன் ! ( கொஞ்சம் லேட்டா ) 2006 வருடத்தில் தான் எழுதிய இடுகைகளின் ஆப்புரேசலை வலையுலக வாரியார் ஜிரா அவர்களால் எழுதவைத்து நமக்குப் பொங்கல் போனஸாகப் பொங்கியுள்ளார் கொத்ஸ் . பொங்கல் போனஸ் மதுரையைச்சேர்ந்த டாக்டர் . சித்ரா பாரூச்சா என்ற பெண்மணி பி . பி . சி . ஒலிபரப்பு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ( தற்காலிகமாக ) ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் கொத்ஸ் . மருதகாரய்ங்க காலரைத் தூக்கிவிட்டுக்குங்கடே
  • 3. பெப்ருவரி 2007 30 பின்னூட்டங்களுக்கு மேல் இருப்பின் அந்த இடுகைகளைத் தமிழ்மணம் திரட்டாது என்பதைச் சோதிக்க ஒரு சோதனை இடுகை இட்டிருக்கிறார் . சோதனைப் பதிவு நம்ம ஆளு , விக்கி சகோதரர் , நகைச்சுவை மன்னர் , நக்கல் நாயகன் பினாத்தலார் 2006 வருட தமிழ் வலைப்பதிவர்களில் சிறப்பாக எழுதியதாக இண்டிபிளாக்கீஸ் தேர்தல் முடிவுகள் வந்திருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் கொத்ஸ் . இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ தமிழ்மணத்தில் பின்னூட்ட உயரெல்லை குறித்த அறிவிப்பினால் , தன் இடுகைகளின் வார்ப்புருவில் மாற்றம் எதுவும் தேவையில்லை என்ற சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கிறார் இந்த இடுகையில் . சக்சஸ் ! சக்சஸ் ! அஸ்ஸாம் மாநிலத்தில் விளையும் ஒருவித சிவப்புமிளகாய்தான் உலகத்திலேயே அதிக காரமான மிளகாய் என்ற கின்னஸ் சாதனையை மகிழ்ச்சியுடன் நம்முடன் சில மேலதிகத் தகவல்களுடன் பகிர்ந்துகொள்கிறார் கொத்ஸ் . இண்டிபிளாக்கீஸைத் தொடர்ந்து ஒரு கின்னஸ் சாதனை ! இண்டிபிளாக்கீஸ் நடத்தும் 2006 வருட சிறந்த தமிழ் வலைப்பதிவர்களுக்கான தேர்தலில் போட்டியில் உள்ள மாஸ்கோ மருத்துவர் இராமநாதனுக்காகவும் பினாத்தலாருக்காகவும் ஒருவர் குரு , மற்றொருவர் நண்பர் இருவருமே வேண்டப்பட்டவர் என்பதனால் இரண்டு வெவ்வேறு மின்னஞ்சல் முகவரிகளில் இருவருக்குமே தனித்தனியாக வாக்களிக்கும்படி வேண்டிக்கொண்டிருக்கிறார் . இரு தலை கொள்ளி எறும்பு
  • 4. மார்ச் 2007 – முதல் பகுதி மகளிர் தினத்திற்கு அனைத்து உலக மகளிருக்கும் வாழ்த்துகள் கூறியபின் 500 இடுகைகள் எழுதிய துளசி ரீச்சருக்கு ஸ்பெஷல் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார் . எல்லா சராசரி மனிதர்களிடம் ( ஆண்கள் ?) இருக்கும் குணங்கள் எதுவும் பெண் வலைப்பதிவர்களிடம் இருப்பதில்லை என்ற நுனிப்புல் உஷாவின் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் கொத்ஸ் . துளசி டீச்சரும் உஷாக்கா பதிவும் ! 12 செயல்களில் [ இது சடுதியிலாம் :-) ] சுவையான சாம்பார் சாதம் செய்வது எப்படி என விளக்கி இடுகையை வெட்டிப்பயல் பாலாஜிக்கு அர்ப்பணிக்கிறார் . சடுதியில் சாம்பார் சாதம் !! தன் நண்பர்கள் இல்லத்தில் சிறுவயது பையன்கள் இருவரும் தத்தம் தந்தையே மிகவும் உயர்ந்தவர் என ஹீரோ வொர்ஷிப் செய்வதைப் பார்த்து சிறு பெண்களாக இருந்தால் அவர்கள் தத்தம் தாயை உயர்வாகப் பேசுவார்களா ? ஹீரோ வொர்ஷிப் ஏன் தேவைப்படுகிறது ? வயதிற்கேற்ப ஹீரோ ஏன் மாறுகிறார் ? போன்ற சில கேள்விகள் எழுப்புகிறார் கொத்ஸ் . இளம் சிறார்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு
  • 5. மார்ச் 2007 – இரண்டாம் பகுதி எக் மசாலா செய்வது எப்படி என்ற சமையல் குறிப்பு இந்த இடுகையில் . எக் மசாலாவும் எடுபட்ட பயலும் !! தன் கிறுக்குத்தனங்களை ஸீசனல் , ஒரேயடியாகப் பிடிக்கும் பிடிக்காது , புதுப்புது தொழில்நுட்ப சாதனங்களின்மீது பற்று , ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவது , எந்தப்புத்தகத்தையும் இரவுபகல் பார்க்காமல் ஒரேமூச்சில் படித்து முடிக்க முயல்வது , மனதில் நினைப்பதை யோசிக்காமல் சொல் ( லி மாட்டிக் கொள் ) வது , பிடித்த உணவகத்தில் எல்லா உணவுப்பொருள்களையும் ஒரு பிடி பிடிப்பது , சமையலில் சொதப்புவது என வரிசைப்படுத்தியுள்ளார் கொத்ஸ் . என்னமோ என்னமோ பிடிச்சிருக்கு !! விலங்குகள் உரிமை குறித்து அலசப்படும் இடுகை இது . விலங்குகள் உரிமை என்றால் என்ன ? லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஒரு பதிவிற்கு எதிர்வினையாக இந்த இடுகையை இட்டுள்ளார் . திருநங்கைகளை இழிவாகக் காட்டபட்ட தொலைக்காட்சித் தொடரின் கருத்துகளை எதிர்க்காமல் வித்யா தனிமனித தாக்குதல் செய்திருக்கிறார் . அது சரியல்ல என்கிறார் கொத்ஸ் . விளிம்புநிலை மாந்தர்களும் ஊடகச் சார்புநிலைகளும் !
  • 6. ஏப்ரல் 2007 – முதல் பகுதி நியூஜெர்சியில் 28-04-2007 அன்று நடக்கவிருக்கும் வலைபதிவர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார் இந்த இடுகையில் . Floralia 2007 - பூக்களுக்கான உற்சவம் ! தமிழ்மணத்தில் ஏதேனும் மாற்றங்கள் முன்னேற்றங்கள் தேவை எனில் அவற்றை வலைபதிவர்கள் / வாசகர்கள் பின்னூட்டமாகத் தெரிவித்தால் வரவிருக்கும் நியூஜெர்ஸி வலைப்பதிவர் சந்திப்பில் அவற்றை விவாதித்து , தொகுத்து , தமிழ்மண நிர்வாகிகளுக்குத் தெரியப்படுத்தத் தேவையான முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்படும் என்று எழுதியுள்ளார் இந்த இடுகையில் . தமிழ்மணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன ? கல்விக்கூடங்களில் இடஒதுக்கீடு குறித்து ஏதேனும் எழுதியிருப்பார் என்று ஆவலுடன் படிக்க வரத் தூண்டும்படி தலைப்பை வைத்துவிட்டு இடுகையில் பாலில் உள்ள கொழுப்புச் சத்து நிரம்பிய க்ரீமி லேயரை ஏன் நீக்கிவிட்டு அருந்தவேண்டும் என்று விவ ( கா ) ரமாக எழுதியுள்ளார் கொத்ஸ் . க்ரீமி லேயரை ஏன் தூக்கணும் ? தனக்குப்பிடித்த அழகுகள் ஆறு என முகம் , இடம் , நிகழ்வு , குறும்பு , பரிசு , சுற்றுப்புறத் தூய்மை என வரிசைப்படுத்துகிறார் கொத்ஸ் . அ . ஆ . ( அன்பே ஆருயிரே எல்லாம் இல்லைங்க )
  • 7. ஏப்ரல் 2007 – இரண்டாம் பகுதி நடத்தவிருக்கும் கோச்சிங் செண்டர் விளம்பர நோட்டீஸில் விவகாரமான மொழிபெயர்ப்பினால் கைப்புள்ள அடி வாங்கி பாண்டேஜ் பாண்டியனாக வந்து தன் சங்க உறுப்பினர்களிடம் தான் அடிவாங்கியதை விவரிப்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார் கொத்ஸ் . கோச்சிங் செண்டர் நோட்டீஸ் ! வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் முதல் ஆண்டு நிறைவு விழாவின்போது அந்தக் குழுவின் இடுகைகளைப்பற்றி பினாத்தலாரின் ஆப்புரேசலை மறுஆப்புரேசல் செய்கிறார் கொத்ஸ் ஆப்பு விமர்சனம் - பெனாத்தலாரின் ஆப்பு ! நியூஜெர்சியில் நடக்க இருக்கும் வலைப்பதிவர் சந்திப்பிற்கான விளம்பர இடுகை இது . இடம் , பொருள் , ஏவல் - Floralia 2007!! வ . வா . சங்கத்தின் முதல் ஆண்டு நிறைவு விழாவின்போது சங்க உறுப்பினர்களை ஆப்புரேசல் செய்யக் கேட்டுக்கொண்டதற்கிணங்க சங்க உறுப்பினர்களைப் பற்றி வெண்பாவாகவே வடித்துவிட்டார் கொத்ஸ் . நான் ஏன் வைக்கணும் ஆப்பு ?!!
  • 8. மே 2007 – முதல் பகுதி ஒரு கருநாடக இசைப்பாடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியின் கனவில் கலைஞர் அவர்கள் வந்து பாட்டுபாடுவதாகவும் பின்நவீனத்துப்பானியில் அதற்கு விளக்கவுரையையும் அளித்துள்ளார் . ஏதய்யா கதி - கர்நாடக சங்கீத பாடலும் பின்நவீனத்துவ ஆய்வும் வாரம் ஒரு நட்சத்திரம் தொடரில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதற்காக சில பழைய சுட்டிகளை ( முதல் பதிவு , ஏன் இலவசக்கொத்தனார் - 1 , ஏன் இலவசக்கொத்தனார் - 2 , எனக்குப் பிடித்தவை ( நான்கு விளையாட்டு ) , மதுமிதாவிற்காக இலவச அறிமுகம் , அப்புறம் கடைசியா அழகுகள் ஆறு ) கொடுத்துள்ளார் . தமிழ்மணத்துக்கு ஏழு நாள் ஏழரை !! ரஜினியின் சிவாஜி திரைப்படத்திற்கு நமக்கு நாமே என்ற விதத்தில் வாசகர்களையே 4 x 4 x 4 x 4 x 4 (= 1024) விதங்களில் தேர்ந்தெடுத்து அதற்கேற்றவிதத்தில் திரைவிமர்சனம் வரும்படி ஒரு புதியவிதத்தில் உள்ள பினாத்தலாரின் இடுகைக்கு ட்ரெய்லர் ஓட்டியிருக்கிறார் . MXXIV - பெனாத்தலாரின் வா சிஜி கோட் நியூஜெர்ஸியில் நிகழ்ந்த பதிவர் சந்திப்பு குறித்துத் தன்னால் எழுத இயலவில்லை என்று மாப்பு கேட்டுக்கொண்டு மற்ற வலைப்பதிவர்கள் எழுதியதை சுட்டி ( டு ) காட்டியுள்ளார் . நியூஜெர்ஸி பதிவர் சந்திப்பு - ஊடக விமர்சனங்கள்
  • 9. மே 2007 – இரண்டாம் பகுதி டாக்டர் ஜெகில் அண்ட் ஹைட் :-) போன்ற இடுகை இது . ஹைலைட் செய்தால் அல்லது control A பொத்தான்களின் உதவியுடன் மறைந்திருக்கும் வாசகங்களை வாசிக்க இயலும் . இது சிலருக்குத்தான் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் . தன் அடுத்த இடுகையில் இதை விளக்கமாகவும் எழுதியுள்ளார் கொத்ஸ் . இந்த இடுகைக்கு உப்பு மாமா பினாத்தலாரும் உதவியிருக்கிறார் . நட்சத்திர உப்புமா ( அ ) பெனாத்தலாருக்கு சமர்ப்பணம் தமிழ்த் திரைப்படங்களின் பெயர்களை விடையாகக்கொண்ட புதிர்கேள்விகள் இந்த இடுகையில் . உதவியாக விடைகள் இருக்கும் பதிவையும் தந்திருக்கிறார் . விடுகதையா இந்த வாழ்க்கை ?!! தன்னுடைய முந்தைய இடுகையைச் சி ( ப ) லரால் புரிந்துகொள்ள இயலவில்லையே என்ற கமல் ரேஞ்ச் ஆதங்கத்துடன் எழுதியிருக்கிறார் . தன் வலையுலக வரலாற்றில் முதன்முறையாகப் பின்னூட்டப்பெட்டியை மூடிவைத்து தேவையான பின்னூட்டத்தை முந்தைய பதிவில் இடும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார் . கமலின் வலி எனக்குப் புரிகிறது ! பயணக்கட்டுரை நாயகி துளசி ரீச்சருக்கு இந்த இடுகையை சமர்ப்பித்திருக்கிறார் . இதில் அமெரிக்க கிழக்குக் கடற்கரை ஓரம் நியூயார்க் மாநிலத்திலுள்ள லேக் ஜியார்ஜ் என்ற ஊருக்குச் சென்றுவந்த ( சென்று உவந்த ) விவரங்களைப் படம் காட்டியிருக்கிறார் . பேராசெய்லிங் மற்றும் ரிவர் ட்யூபிங் பயணங்கள் மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக எழுதியுள்ளார் . துளசி டீச்சருக்கு சமர்ப்பணம் !
  • 10. ஜூன் 2007 – முதல் பகுதி சில நாடுகளில் ஜூன் 1 அன்று குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது என்ற செய்தியுடன் , வாசகர்களை வெண்பா வடிக்கலாம் வா என்கிறார் கொத்ஸ் . சிறுவர் சிரிப்பே சிறப்பு ! - ( வெ . வ . வா ) தமிழ்மணத்தில் நட்சத்திர வாரம் ஒன்றில் பங்கெடுத்து இடுகைகள் இட்டு முடித்தபின் அனைவருக்கும் தன் வணக்கங்களைத் தெரிவிக்கிறார் இந்த இடுகையில் . தினம் ஒரு இடுகை தனக்குச் சற்றெ கடினமாக இருந்தது என்று கூறுகிறார் . மீள்பதிவு , பயணக்கட்டுரை , சமையல் குறிப்பு , புதிர்போட்டி , வெண்பா போட்டி எல்லாவற்றிற்கும் இறுதியாக பாடகர் டி . எம் . கிருஷ்ணா பாடிய நான்கு மங்களம் பாடல்கள் கொண்ட ஒரு இசைப் பதிவைக் கொடுத்திருக்கிறார் . அந்தரிகி வந்தனமு !! திரைப்படப் பெயர்களின் புதிர்களின் விடைகளை விவரிக்கிறார் இந்தப் பதிவில் . என் இல்லத்தினருக்குப் பிடித்த சுடோகு புத்தகங்களைப் பரிசாகக் பெ ( ற் ) ற எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது . என்னை மிகவும் யோசிக்கவைத்த கேள்வியின் விடை உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்பதுதான் . விடை தருவேன் நானே !! சில அமெரிக்க மாநிலங்களில் விவாகரத்து வழக்குகளில் அதைகோருவதற்கான காரணங்களை நகைச்சுவையாக எழுதியுள்ளார் . இரண்டாவது பகுதியாக ஜீவனாம்சம் குறித்துச் சில கேள்விகளை விவாதிக்க வாசகர்களுக்கு அழைப்புவிடுகிறார் . இறுதியில் ஜீவனாம்சம் குறித்த வினோத வழக்கு ஒன்றையும் எழுதியுள்ளார் . சில விவாகரத்துக் குறிப்புகளும் ஜீவனாம்ச கேள்விகளும் ...
  • 11. ஜூன் 2007 – இரண்டாம் பகுதி FreeStuffHotDeals Hacker Puzzle என்ற புதிரைச் சுட்டுத் தருகிறார் கொத்ஸ் இங்கே . கூகிளாண்டவர் உதவியுடன் பலர் இந்தப் புதிரை விடுவித்ததாகப் பின்னூட்டத்தில் எழுதியுள்ளனர் . சுட்ட புதிர் வேணுமா ? சுடாத புதிர் வேணுமா ? தன்னைப்பற்றிய 8 தகவல்களை வலைப்பதிவர் எழுதவேண்டும் என்ற தொடர் விளையாட்டில் தான் CA, ICWA தேர்வுகளில் தேசிய அளவில் ரேங்க் பெற்றது , தரையிலும் நீரிலும் ( மேலேயும் கீழேயும் ) வானத்திலேயும் பயணம் சென்றிருந்தாலும் கன்கார்டில் செல்ல இயலாது வருந்தியது , அவுஸ்திரேலியா தவிர மற்ற கண்டங்களுக்குச் சென்றுவந்தது , சிறுவயதில் மட்டையடிப் பந்தாட்டம் ஆடியது , இசையை இரசிக்க ஆரம்பித்துள்ளது , வகைதொகை இல்லாமல் பிடித்தது பிடிக்காதது என்று எல்லாவற்றையும் ஆழ்ந்து படிப்பது , பொங்கி வரும் தண்ணீரில் ( ஆறு குளம் அருவி போன்றவைதாங்க - வேறெதுவும் எண்ண வேண்டாம் ) குதித்துக் கும்மாளமிடுவது , தன் எழுத்தாக்கங்களையும் படிக்க மக்கள் வருகிறார்களே என்று வலைப்பதிவது என்று சுவாரசியமாகச் சொல்கிறார் இந்த இடுகையில் . எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ ஆசிஃப் அண்ணாச்சி , சிபி அண்ணாச்சி காட்டிய வழியில் இலங்கைக்குத் தாண்டிய அனுமனின் திறந்த மனசைப் படம் பிடித்து காட்டுகிறார் கொத்ஸ் . இதுதாண்டா திறந்த மனசு !! ஆறே வரிகளில் உள்குத்துடன் சிவாஜி திரைப்பட விமர்சனமாக அல்வா கிண்டிய இடுகை இது . சிவாஜி - ( நம் ) வாயிலே ஜிலேபி !!! தன்னைக்கவர்ந்த விளம்பரங்களைப் படம் காட்டுகிறார் இங்கே . விளம்பரப்படுத்தப்பட்ட பொருள்கள் காப்பி , டியோடரண்ட் , ட்யூராசெல் , பர்கர் , மின்சாரபல்புகள் , சிகரெட் சுவாசித்தலின் தீமை , உடற்பயிற்சி கருவி , விசாலமான மகிழ்வுந்து மற்றும் உடைகள் இது ஒரு விளம்பரப் பதிவு !!!
  • 12. ஆகஸ்ட் / செப்டம்பர் 2007 தங்கமணியின் நச்சரிப்பு தாங்காமல் மருத்துவசோதனை செய்துகொள்ளப் போய் உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பு குறைய உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றும்படியும் உடற்பயிற்சி செய்யும்படியும் டாக்டன் ( இனிமேல் மரியாதை கிடையதாம் ) கூற வீட்டிற்கு வந்தது டிரெட்மில் , ஸ்டெப்பர் . சைக்கிள் , எலிப்டிகல் , ஈடிசி . ஈடிசி . தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்துக்கொண்டே உடற்பயிற்சி செய்ய மேலிடத்து உத்தரவு . மீற முடியுமா என்ன ? பென்ஸ் காரில் சென்ற அந்த உடற்பயிற்சி சாதனக் கடை உரிமையாளரிடம் பேசினால் அவரும் சர்வைவல் ஆஃப் தி ஃபிட்னெஸ் என்று கடுப்பேத்துகிறார் என்கிறார் கொத்ஸ் சர்வைவல் ஆப் பிட்நெஸ் ! ( நிஜமான ) சமீபத்தில் நிகழ்ந்த இந்திய பாகிஸ்தான் மட்டையடிப் பந்தாட்டத்தொடர் விளையாட்டு ஒன்றின் இறுதியில் பாகிஸ்தான் அணித்தலைவர் கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் , தான் பாகிஸ்தான் மக்களுக்கும் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியது தனக்கு நெருடலாகத் தோன்றியது . விளையாட்டில் *** மதத்தைக் *** கொண்டு வரும் இது போன்ற பொறுப்பற்ற பேச்சுகள் தேவையா எனக் கேட்கிறார் கொத்ஸ் . இந்த சமயத்திலும் சமயமா ? தம்பி மட்டுமதான் ஜொள்ளு இடுகை போடுவாரா ? தானும் சளைத்தவரில்லை என்று படம் காட்டுகிறார் இதில் Mid Week ஜொள்ளு
  • 13. அக்டோபர் 2007 – முதல் பகுதி மட்டையடிப் பந்தாட்டத்தில் ( கிரிக்கெட் என்று சொல்வாங்களே அதாங்க ) அவுஸ்திரேலிய அணி ஆட்டக்காரர் சைமண்ட்ஸ் குறித்து சில இந்திய இரசிகர்கள் செய்யும் சேட்டைகளை இனவெறிச் செயல் ( ரேசிஸம் ) என்று அந்த அணியினரும் உலக மட்டையடிப் பந்தாட்ட குழுவும் ( ஐ . சி . சி .) சொல்வதில் தனக்கு உடன்பாடில்லை . சில இந்திய இரசிகர்கள் செய்யும் அச்செயல் தவறுதான் என்றும் ஆனால் அது வெறும் விளையாட்டினை யொட்டிய கலகச்செயல் ( ஹூலிகனிஸம் ) என்கிறார் கொத்ஸ் . இதுக்குப் பேரு இனவெறியா ? தலைப்பிற்கும் இடுகைக்கும் தொடர்பே இல்லை என்று தானே டிஸ்கி விட்ட இடுகை . உயிரினங்களில் பெண்ணினத்தைவிட ஆணினம் விரைவில் மூப்படைந்து இறக்க ஒரு காரணம் இனவிருத்திக்கான போட்டி என இங்கிலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்களாம் . நீ எல்லாம் ஒரு பொம்பளையா ? அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் பரவிவரும் இந்திய சமுதாயத்தின் பங்கினை விளக்க ராஜ் படேல் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கிய ஆர்ச்சீஸ் காமிக்ஸ் நிறுவனத்திற்குத் தன் பாராட்டினைத் தெரிவிக்கிறார் கொத்ஸ் . உங்களுக்கு ராஜ் படேலைத் தெரியுமா ?
  • 14. அக்டோபர் 2007 – இரண்டாம் பகுதி வலையுலகக் கைப்புள்ளயின் பாணியில் வரப்போகும் கேள்விபதில் இடுகைகளுக்கான முன்னுரை இந்த இடுகையில் குயி ... குயி ... குயி ... குயிஜு வரலாறு , அறிவியல் மற்றும் புவியியல் குறித்த வினாக்கள் இந்த இடுகையில் . நடந்ததுக்கு ஆதாரம் எங்கே ? - க்விஸ் பாகம் 2 விளையாட்டு , கணினியியல் , வணிகம் குறித்த கேள்விகள் இந்த இடுகையில் ஆடுது பார் , கல்லாப் பெட்டி ! க்விஸ் பாகம் - 3 தமிழ் , ஆங்கிலம் , கணக்குத் துறைகளில் கேள்விகள் இந்த இடுகையில் மொழியறிவும் முழியறிவும் - க்விஸ் பாகம் 1
  • 15. நவம்பர் 2007 – முதல் பகுதி எதிர்பாராத அளவு 40 - 50 வாசகர்கள் கலந்துகொண்டது , ஏறக்குறைய 1200 பின்னூட்டங்கள் , விடைகள் மற்றும் இறுதி மதிப்பெண் விவரங்கள் , 10 வாசகர்கள் முழு மதிப்பெண்கள் 54 பெற்றது , தான் சற்றே சறுக்கியது , புதிர்கள் என்ற புதிய பதிவு இட முடிவுசெய்துள்ளது , yours faithfully க்கும் ஹரிஅண்ணா அவர்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகள் என்று நினைவுகூர்கிறார் கொத்ஸ் குயி ... குயி ... குயி ... குயிஜு ! விடை தரும் தருணம் ! முதல் முறையாக வாசிக்கும்போது கொத்ஸ் ஏன் இதுபோன்ற இசைத்துறைபதிவுகளை இதுவரை எழுதவில்லை என்ற ஏக்கம் எழுந்தது . இடுகையின் இறுதியில்தான் தெரிந்ந்தது அதை எழுதியவர் கருநாடக இசைப்பாடகர் திரு . டி . எம் . கிருஷ்ணா அவர்கள் என்பது . பாடகர் மற்றும் பக்கவாத்தியக்காரர்கள் எதிர்பாலினராக இருப்பின் வரும் பிரச்சினைகள் குறித்த பதிவு அது . ஆண்கள் பாடகர்களாக இருந்தால் பெண் பக்கவாத்தியக்காரர்களுக்குத் தகுந்த வாய்ப்பு அளிப்பதில்லை மற்றும் ஆண்கள் பக்கவாத்தியக்காரர்களாக இருந்தால் , நல்ல பெயர் பெற்றபின் பெண்பாடகர்களுக்கு பக்கவாத்தியக்காரர்களாக இருப்பதில்லை என்பது . ஈயம் பித்தளை இசைத்துறையிலும் இருக்கிறது என்பதையே காட்டுகிறது . ஸ்ருதி சேரா சங்கீதம் தான் பதிவெழுதக் காரணமாக இருந்த டுபுக்கு , தமிழ்ப் பகுதியின் கேள்வி பதில்களுக்கு உதவிய ஜீவ்ஸ் , பதில் சொல்ல எல்லோருக்கும் உதவிய கூகிளாண்டவர் , பினாத்தலார் , கொத்ஸின் இனிய மறுபாதி , மற்றும் போட்டியில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் இடுகை இது . என் வால் ஏன் ஆடுது ? - க்விஸ் பாகம் 4
  • 16. நவம்பர் 2007 – இரண்டாம் பகுதி நவம்பர் மாதப் புகைப்படப்போட்டிக்காக சாலை என்ற தலைப்பில் தான் எடுத்த சில புகைப்படங்களை இட்டிருக்கிறார் . ஆனால் சாலையைவிட வீடுகளும் , மரங்களும்தாம் நன்றாக இருக்கின்றன என்றே நான் நினைக்கிறேன் . சா ( லை ) ல சிறந்தது ! மலேசியாவில் ஹிந்திராஃப் என்ற அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் கூட்டத்தினரைக் கலைத்ததையும் 250 பேரைக் கைது செய்ததையும் குறித்துத் தமிழக முதல்வர் இந்தியப் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார் . அது குறித்து மலேசிய அமைச்சர் Tamil Nadu Chief Minister M Karunanidhi should lay off என்று கூறியிருக்கிறார் . இதை எதிர்த்து ஏன் எந்த மலேசிய / தமிழக தமிழ் வலைப்பதிவர்கள் ஒன்றுமே எழுதவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் கொத்ஸ் . மலேசிய அமைச்சரின் பேச்சு கண்டிக்கப்படவேண்டும் . இந்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார் கொத்ஸ் . கலைஞரே , உம்ம வேலையைப் பார்த்துக்கிட்டு போம் !
  • 17. டிசெம்பர் 2007 – முதல் பகுதி நூறாவது இடுகையைப் புதுவிதமாகக் கொண்டாட " கொத்தனாரின் பதிவுகளில் விஞ்சி இருப்பது உப்புமாச் சுவையா அல்லது பின்னூட்ட வெறியா ?" என்ற பட்டி மன்றம் ஒன்றினை பாப்பையா தலைமையில் ஏற்பாடு செய்திருக்கிறார் . ஒன்றானவன் - இரண்டானவன் - இப்ப நூறானவன் ! பட்டிமன்றம் பாகம் 1! கொத்தனாரின் பதிவுகளில் விஞ்சி இருப்பது பின்னூட்ட வெ ( ற் ) றியே என்று வலையுலக மாதாமகி :-) துளசி ரீச்சர் சொல்கிறார் . உப்புமா ஊசிப்போய்விடும் . பின்னூட்டங்கள் என்றும் வளர்ந்துகொண்டே இருக்கும் . உப்புமா பூனை . பின்னூட்டங்கள் யானை என்கிறார் யானை நாயகி . சபாஷ் சரியான போட்டி என்று சொல்லும்வண்ணம் ஒரு உப்புமா பதிவு போட்டால்தான் பின்னூட்டங்களுக்கே வாழ்வு . பின்னூட்டமில்லாத பதிவு இருக்கலாம் . ஆனால் பதிவில்லாமல் பின்னூட்டங்கள் இருக்க முடியுமா ? பின்னூட்ட உயர் எல்லை வந்தபோதும் சற்றும் கலங்காமல் உப்புமா கிண்டியவர் கொத்ஸ் . இடுகையின் தலைப்பே எல்லோரையும் பதிவை வாசிக்கத்தூண்டும் கலையில் வல்லவர் கொத்ஸ் . தன்னுடைய நூறாவது இடுகையைக்கூட மற்றவர்கள் போல் வாசகர்களுக்கு நன்றி என்று எழுதாமல் புதுவிதமாகப் பட்டிமன்றம் எனக் கிண்டியிருக்கிறார் கொத்ஸ் என்கிறார் உப்பு மாமா பினாத்தலார் . கோதாவில் பின்னூட்டநாயகியும் உப்பு மாமாவும் - பட்டிமன்றம் பாகம் 2 பின்னூட்டக் கச்சேரிக்கு ஒத்து ஊத வந்தார் தேவ் . பொதுவாகப் பதிவர்கள் தங்கள் இடுகைகளின் எண்ணிக்கையை மட்டுமே எண்ணிப் பார்ப்பர் . ஆனால் நம் கொத்ஸ் நேரம் காலம் பார்க்காமல் பின்னூட்டங்களுக்கே தன் கவனத்தைச் செலுத்துவார் என்பது அனைவருக்கும் தெரியும் என்கிறார் தேவ் . தேவு பிழிந்த சேவு - பட்டிமன்றம் பாகம் 3
  • 18.
  • 19. டிசெம்பர் 2007 – மூன்றாம் பகுதி டிசம்பர் மாத புகைப்படப்போட்டியில் கலந்துகொள்வதற்காக மலர்கள் என்ற தலைப்பில் தான் எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார் . பூ பூக்கும் மாசம் தை மாசம் - ஆனா எங்க ஊரில் இல்லை ! சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றினை அறியாதவர்களால் இந்தக் கதையை இரசிக்க இயலாது என்றே நினைக்கிறேன் . வீணாவின் ஜாக்கெட் ! ( ந . ஒ . க .) இந்த இடுகையில் அசைபடம் மற்றும் ஜாடியில் இடக்கூடிய பொருள்கள் என்ற எடுத்துக்காட்டுகளுடன் மேலாண்மை குறித்த சில தகவல்களை எழுதியுள்ளார் . நாம் எந்த வேலை செய்தாலும் நம் அருகில் என்ன நடக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும் என்று சொல்கிறார் . பூனைக்குட்டி என்ன பூனைக்குட்டி . கொரில்லாவே வெளியே வந்துவிட்டதே ! வேலை கிடைக்காததனால் நிறைவேறாத காதலினால் மனநிலை பிறழ்ந்த ஒருவனின் கதை இது . ( ஆங்கில வார்த்தைகள் இல்லாமல் எழுத முயற்சி செய்திருக்கிறேன் என்கிறார் கொத்ஸ் ) அவள் பறந்து போனாளே ...!